சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைக்கும் எல்லா பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரு சல்யூட்

என்னை தெரிந்த வாசகர்களுக்கும் தெரிந்து கொள்ள பிரியப்படுபவர்களுக்கும் எல்லோருக்கும் வந்தனங்கள்.

நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் உங்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோசம்!  உலகம் படு வேகமாக சுத்தி போச்சுப்பா!  நாங்க திரும்பி பார்க்கும் போது பத்து வருஷம் ஓடியே போச்சு.  lockdown ஆனதில் ஆற அமர ஒரு நாள் நெட் இல் உக்கார்ந்த பொழுது தான் தெரியவந்திச்சு நாம எவ்ளோ பாப்புலர்ன்னு ! நமக்காக ஒரு வாசகர் பட்டாளமே இருக்குன்னு….அடடா ரொம்ப மிஸ் பண்ணிட்டோமோ என்று பீலிங் வந்திச்சு.. இரு கைகள் ஒரு மூளை போதாதுப்பா !

பொதுவா என் கதையில் தேவையற்ற பிரச்சாரங்களோ அலட்டல்களோ போரடிக்கும் விஷயங்களோ இருப்பது இல்லை என் வாசகர்களுக்கு போரடிக்க கூடாது சலிப்பு ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அதை விட என் நேரத்தையும் உழைப்பையும் வேஷ்டாக்கி  போரடிக்கும்படி ஒரு மசாலா நாவலை தருவதில் எனக்கு எந்த காலத்திலும் உடன்பாடு இல்லை அவ்வாறான நாவல்களை நினைத்து கூட பார்க்கமாட்டேன். எனது எல்லா நாவல்களின் கருவும் நிஜ வாழ்க்கையில் நடந்தவைகளாக இருக்கும். என் எழுத்தை நான் காதல் செய்கிறேன் ஆகையால் எழுதுகிறேன். எண்ணங்களை எழுத்தில் வடிக்கும் பொழுது மனங்களின் இறுக்கம் மறையும் மாயம்  இவ்வெழுத்து உலகத்திலேயே.

எனது நாவல்களை மீண்டும் படிக்க கிடைக்குமா என கேட்டவங்களுக்கும் புதிதாக படித்து பிடித்து போகப்போறவர்களுக்கும் பிடிக்காமல் போகுறவர்களுக்கும் சேர்த்து

எந்த வெப்சைடில் 2007 வாசித்தீர்களோ அந்த வெப்சைட்டில் மீண்டும் PDF இல் அப்லோட்.
1-நீதான் எந்தன் சுவாசமாய் (அழகிய அசுரா ) - PUBLISHED BY ARUNOTHAYAM

2-எங்கே என் மனம் - PUBLISHED BY ARUNOTHAYAM

(available online Amazon  : www.amazon.com/எஸ்-ஜோவிதா/e/B091GCHXWW)

 

3-உருகாதோ எந்தன் உள்ளம் 

(available online Amazon : www.amazon.com/எஸ்-ஜோவிதா/e/B091GCHXWW) - PUBLISHED BY ARUNOTHAYAM

 

4-நிலாவே வா - PUBLISHED BY ARUNOTHAYAM

 

5-யாரின் மனம் யாருக்கென்று  - PUBLISHED BY ARUNOTHAYAM

 

6-என்னில் நீயடி ! NEW PUBLISHED BY ARUNOTHAYAM 18/12/2020

 

7-எந்தன் விழியோடு உறவாடும் காதலே! NEW PUBLISHED BY ARUNOTHAYAM 18/12/2021

 

8- நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்குறாய்… !  NEW WILL BE SOON PUBLISHED BY ARUNOTHAYAM

 

 

மிக விரைவில்!!!!

என்னை கொல்ல  வந்தவனே !

நீ எனக்கென ! 

தேயாத  வெண்ணிலவே  !

எனக்கான கவிதை நீ !

கரிசல் காட்டு காதல் தேவதை !

தேனூறும் ராகம் !

நீ ! நான் ! நம் கவிதை! 

என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் !

தீண்ட தூண்டும் தென்றல்!

விரசமில்லா காதலும் விலக மனமில்லா நானும்!

(இன்னும் பல files தேடுவதற்கு FBI CBI கிட்டே சொல்லியிருக்கு பார்ப்போம்…)
அன்புடன் எஸ்.ஜோ

 

Unblog.fr | Annuaire | Signaler un abus